உள்ளடக்கத்துக்குச் செல்

அபுபக்கர் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுபக்கர் சா துக்ளக்
21வது தில்லி சுல்தான்
ஆட்சி15 மார்ச் 1389 – ஆகஸ்ட் 1390
முன்னிருந்தவர்துக்ளக் கான்
பின்வந்தவர்மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா
அரச குலம்துக்ளக் வம்சம்
தந்தைசாபர் கான் ( பிரூசு சா துக்ளக்கின் மகன்)
பிறப்புதெரியவில்லை
இறப்பு1390க்குப் பின்னர்
சமயம்இசுலாம்

அபுபக்கர் சா துக்ளக் (Abu Bakr Shah Tughlaq) (ஆட்சி 1389-1390), துக்ளக் வம்சத்தின் ஓர் முஸ்லிம் ஆட்சியாளர். இவர் சாபர் கானின் மகனும், சுல்தான் பிரூசு சா துக்ளக்கின் பேரனும் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

இரண்டாம் கியாசு-உத்-தின் துக்ளக் என்கிற துக்ளக் கான் ( சுல்தான் பிரூசு சா துக்ளக்கிற்குப் பின் வந்தவர்) கொல்லப்பட்ட பிறகு, அபு பக்கர் தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் ஆட்சியாளரானார். இருப்பினும், இவரது மாமா, மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா என்பவரும் ஆட்சிக்கு உரிமைக் கோரினார். மேலும் அபு பக்கருக்கு எதிராக போராடினார். முகம்மது சா 1390 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியைத் தாக்கி அரியணையைக் கைப்பற்றினார். அபு பக்கர் தோற்கடிக்கப்பட்டார். முகமது சா 1390 முதல் 1394 வரை ஆட்சி செய்தார். தோல்விக்குப் பிறகு, அபு பக்கர் மீரட் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், விரைவில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jaswant Lal Mehta (1980). Advanced study in the history of medieval India. Vol. 1. Sterling Publishers. p. 240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-0617-0. பார்க்கப்பட்ட நாள் 8 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுபக்கர்_சா&oldid=3834171" இலிருந்து மீள்விக்கப்பட்டது